Showing posts with label construction. Show all posts
Showing posts with label construction. Show all posts

Thursday, June 10, 2010

வாஸ்தவமான வாஸ்து

வாஸ்து  ஒரு   கடல். அந்த  கடலில்  எந்த  அலையும்  தெரியாத  அரை  குறைகள்  எல்லாம்  இன்று  ஊரையே  பைத்தியம்  ஆக்கிக்கொண்டு  இருக்கிறார்கள்.
மனை  அடி  சாஸ்திரத்தில்  16 அடி  மிகுந்த செல்வம், 12 அடி  செல்வம்  குழைந்து  போகும்  என்று  போட்டிக்கும். இந்த  அடி  அங்குலம்  என்பதெல்லாம்  பின்னால்  வந்த  கணக்கு. எனவே, இந்த  16 அடி, 12 அடி  என்பதெல்லாம்  ஸ்கேல்  அடி  அல்ல. வீட்டு  எஜமானர்  கால்  அடி. அவர்  காலால்  16 அடி  நடக்க  அது  தான்  மனை  அடி  சாஸ்திரம்  என்று  ஒரு  வாஸ்து  நிபுணர்  சொல்கிறார். 16 அடி ஸ்கேல் வைத்து  கட்டியவன்  கதி  என்னாவது? இந்த  தியரி  உண்மை  என்றல்  அப்பா  தனது  காலடியில்  16 அடி  பார்த்த  வீட்டில்  அப்பா  இறந்து  மகன்  எஜமானன்  அனால்  வாழ  முடியாதா? என்ற  கேள்வி  எழும். ஆனால்  அப்பா  பிள்ளை  உடல்  வாகு  ஒரே  மாதிரி  இருக்க  அதிக  வாயப்பு  உண்டு  என்று  வாஸ்து  பதில்  சொல்லும்.
வாஸ்து  ஒரு  சயின்ஸ். அதை  நான்  மறுக்க  வில்லை. அதன்  அறிவியல்  கூறுகளை  உணருவது  அவசியம். ஒரு  முக்கியமான  விளக்கம். கேரளாவில்  மலையாளத்தில்  வாஸ்து  நூல்  உண்டு. அப்படியே  அந்த்ராவில்   கர்நாடகத்தில்  அந்த  அந்த  மொழியில்  எழுத பட்டுள்ளது அந்தரா  வாஸ்துவை  தமிழ்நாட்டில்  அப்ளை  பண்ணகூடாது. கேரளா  வாஸ்து  தமிழ்  நாட்டுக்கு  பொருந்தாது. சின்ன  சின்ன  வேறுபாடுகள்  மண்ணின்  தட்ப  வெப்பம் , நீரோட்டம் , கடல்  உயரம்  காரணமாக  ஏற்படும்  இவையெல்லாம்  உளறுகிற  உள்ளூர்  வஸ்துவுக்கு  உரைக்கவா  போகிறது ? தமிழ்  நாட்டு  வாஸ்து  நிபுணர்கள்  மேற்கே  இருந்து  கிழக்கே  தண்ணீர்  ஓட்டம்  இருக்க  வேண்டும்  என்பார்கள் . ஏன்  தெரியுமா ? நமது  நதிகள்  எல்லாம்  மேற்கே  உற்பத்தியாகி  கிழக்கே  வங்காள  விரிகுடாக்கடலில் கலப்பவை . ஆனால்  கேரளாவுக்கு  இந்த  வாஸ்து  பொருந்தாது . அங்கே  நதிகள்  கிழக்கே  உண்டாகி  மேற்கே அரபிக்கடலில்  கலக்கின்றன . அங்கு  நீரோட்டம்  கீழ்  மேல் . தமிழ்  நாட்டில்  மேல்  கீழ் . அது  மாதிரியே  மழை  வெயில்  கணக்கு  பார்த்து  வீடுகட்ட  இலக்கணம்  வகுத்தனர்  முன்னோர்கள் . இப்போது  எந்த  தர்ம  நியாமும்  இல்லாத  ப்ளாட்ஸ்  வந்துவிட்ட  பிறகு  எதை  அளவுகோலாய்  வைத்து   பேச ... எழுத ...?
பூமி  வடகிழக்கில்  சற்று  சாய்ந்த  நிலையில்சுழலுவதால் வடகிழக்கில்  பாரம்  கூடாது  என்பது  பொதுவான  வாஸ்து . இந்தியாவில்  வடக்கு  நோக்கிய  காந்த  ஈர்ப்பு  இருப்பதால்  பூஜை  அறை  வடக்கு  நோக்கி  இருப்பது  த்யனத்துக்கு  நல்லது . இது  இந்தியாவுக்கு  பொருந்தும் . ரஸ்சியாவுக்கு   பொருந்தாது . நம்  உள்ளூர்  வாஸ்து  ரஷ்சியா   போய்  இதையே  உளறுவது  அசிங்கமாக  இல்லையா ? வடக்கு  ஞான  திசை  என்பதால்  தெற்கு  பார்த்து  அலமாரி வைத்தால்  கொஞ்சம்  சில்லறை  சேர  சான்ஸ்  உண்டு. இந்த  யோசனை  சீனாவுக்கு  செல்லாது.
காற்றோட்டம், வெப்ப ஓட்டம், சூரிய உதயம், நீரோட்டம்  இவற்றை  கணக்கிட்டு  வீடு  கட்டுவது  அவசியம். பூமியை  தூண்டும்போது  சக்தி  அலை  சரியாக  துண்டடப்படுவது  அவசியம். எல்லாவற்றையும்  விட  என்னத்தூயமையுடன்  தருமம்  சிதறாமல்  வாழ்ந்தால்  எந்த  வீடும்  நல்ல  வீடு  தான்.
பஞ்ச பாண்டவருக்கு வாஸ்து சாஸ்திரம் தோற்றுவித்த மாயன் கட்டிகொடுத்த மாளிகையில் பாண்டவர்கள் வாழ முடிந்ததா? 13 வருடம் காட்டிலும்  மேட்டிலும்  பிச்சை  அல்லவா  எடுத்தார்கள்? வாஸ்து அவர்களை  வாழ  விட்டதா? வாஸ்து  சாஸ்திர  பகவான் மாயனே  கட்டினாலும் தருமத்துக்கு  விரோதமாக  சூதாடத் துணிந்ததால்  சாஸ்திரத்தை  விட  தர்ம  சாஸ்திரம்  வலிமையானது. வாசலையும் ஜன்னலையும் மாற்றினால் துயரங்கள் தீராது. வாழ்வையும் எண்ணங்களையும் மாற்றுங்கள். வாஸ்தவமான வாஸ்து அதுதான்.
-சுகி சிவம்