Monday, May 31, 2010

பந்தளம் அரண்மனை

Pandhalam Palace: கேரளாவில் இருக்கும் பழமையான அரண்மனைகளில் ஒன்று பந்தளம் அரண்மனை.
இது சுவாமி ஐயப்பனின் வரலாறுகளில் ஒன்றாக கூறப்படும் ஒரு சம்பவம்.
சுவாமி ஐயப்பன் ஒரு ராஜ வம்சத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு ராஜ வாழ்க்கை பிடிக்கவில்லை.
எனவே சபரி மலைக்கு சென்று இருந்து கொண்டார்.
எனினும் அவர் தந்தையின் ஆசைக்காக வருடத்தில் ஒரு நாள் மட்டும் இளவரசன் கோலம் சூடிக்கொல்வதாக தன் தந்தையிடம் தெரிவித்தார். அந்த சம்ப்ரதாயம் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.
ஐயப்பனின் தந்தை ஐயப்பனுக்காக சுத்த தங்கத்தினால் ஆன ஆபரணங்களை செய்து வைத்திருந்தார். அந்த ஆபரணங்கள் இன்றும் கேரளத்தில் உள்ள பந்தளம் அரண்மனையில் இருக்கிறது. ஐயப்பன் பந்தளம் அரண்மனையில் வாழ்ந்ததாக வரலாறு. அரண்மனை என்றவுடன் பெரிய மாடமும் தூண்களும் இருக்கும் என்று எல்லோரும் நினைபோம். ஆனால் அந்த அரண்மனை அப்படி இல்லை. இரண்டு ஒட்டு வீடுகள் தான். அங்கு தான் எல்லோரும் பார்கத்துடிக்கும்ஐயப்பனின் ஆபரணங்கள் இப்போதும் இருக்கிறது.
பக்தர்கள் புடை சூழ ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் அந்த ஆபரணங்கள் சபரி மலைக்கு கொண்டு செல்லப்படும். இதில் ஒரு சில விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை. அந்த ஆபரணங்கள் சபரி மலைக்கு கொண்டு செல்லும் போது ஐயப்பனின் தந்தை ஸ்தானத்தில் பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதிநிதியாக மலைக்கு அனுப்பி வைக்கப்படுவார் . ஐயப்பனின் ஆபரணங்கள் மூன்று பெட்டிகளில் இருக்கிறது. அதை தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர் மட்டுமே மலைக்கு சுமந்து செல்கின்றனர். வாழ்நாளில் ஒரு முறையாவது ஐயப்பனின் ஆபரங்களை பார்த்து விடமாட்டோமா என்று பக்தர்களை ஏங்க வைக்கும் அந்த ஆபரங்களை சுமந்து செல்வதைஅவர்கள் பெரிய பாக்யமாக நினைகின்றனர். பந்தளத்தில் இருந்து மலைக்கு செல்ல மூன்று நாட்கள் ஆகும். அவர்கள் அந்த ஆபரணப்பெட்டிகளை மூன்று நாட்களும் தலையில் சுமந்து செல்வர்கள். பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இருந்தாலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சபரி மலைக்கு செல்வதை தவிர்ப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செல்வர்கள். காரணம், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதை செலுத்த எழுந்து நிற்க வேண்டியது வரும். அதனால் தவம் கலையும். எனவே ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் போதும் என்று ஐயப்பன் தன் குடும்பத்தை கேட்டுக்கொண்டதாக வரலாறு. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். பெட்டியை மலைக்கு கொண்டு போகும்போது பகவான் விஷ்ணு கருடன் வடிவில் பெட்டிக்கு காவலாக வருவதாக ஐதீகம். பெட்டியை மலைக்கு கொண்டு செல்ல அந்த குறிப்பிட்ட நாள் அன்று அனைத்தும தயாராக இருந்தாலும் வானத்தில் கருடன் தெரிந்த உடன் தான் அவர்கள் மலைக்கு கிளம்புகிறார்கள். இது வரை ஒரு ஆண்டு கூட கருடன் வராமல் இருந்ததில்லை. பெட்டியை மலைக்கு கொண்டு செல்வது நிற்கவில்லை என்று பக்தர்கள் சொல்கிறார்கள். பெட்டியை மலைக்கு கொண்டு சென்று திரும்பும் வரை மூன்று ஆபரணப்பெட்டிகளுக்கும் காவலாக கருடன் வானத்தை சுற்றியபடி வந்து கொண்டே இருக்கிறது.