Monday, May 31, 2010

முதலில் மனிதானாய் இருப்போம்

மதங்கள் பல உண்டு. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், புத்தம், ஜைனம் ஆகியன நமக்கு தெரிந்தவை. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கொள்கையைகொண்டிருக்கிறது. மற்ற மதத்தின் கொள்கையைப்பற்றி நாம் அவதூறு பேசுவது சரி ஆகாது. என்றாலும், மனிதம் என்ற நிலையில் இருந்து என் கருத்துக்களை பதிவு செய்கிறேன். அந்த மதத்தின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அந்த குறிப்பிட்ட மதத்தில் நல்ல கோட்பாடுகள் நிறைய இருக்கின்றன என்பதை முதலில் ஒத்துக்கொள்கிறேன். அந்த மதத்தில் உள்ள கோட்பாடுகளில் சில என் மனதை சுட்டது. அதன் ஆற்றாமைகளை இங்கு விளக்குகிறேன்.
அந்த மதத்தை சார்ந்த பெரும்பாலானவர்கள்,
* இந்துக்களின் கடவுளர்களின் சிலையையோ, படத்தையோ வைத்திருந்தால், அந்த அறைக்குள் வரவே மாட்டார்கள்.
* தீபாவளி, பொங்கல், கோவில் விசேஷம், மொஹரம், ரம்ஜான் என்று சுப தினத்தன்று மற்ற மதத்தை சார்ந்தவர்கள் சமைக்கும் சமையலை உண்ண மாட்டார்கள்.
* மற்ற மதத்தை சார்ந்தவர்களும் தங்கள் வழிபாட்டு தளத்திற்கு வரவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் இவர்கள் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் வழிபாட்டு தளத்திற்குள் நுழையவே மாட்டார்கள்.
* இவர்கள் மதத்தை பற்றி மற்ற மதத்தினரிடம் நிறைய பேசுவார்கள். ஆனால் மற்ற மதத்தை பற்றி கேட்பது கூட பாவம் என்று நினைப்பார்கள்.
* திரைப்படம் என்பது எல்லோரும் விரும்பி பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு விஷயம். ஆனால் திரைப்படம் பார்ப்பது பாவம் என்று இந்த மதத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறுவார்கள்.
* மற்ற மதத்தினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் மதம் சம்மந்தமான எந்த கட்டுப்பாடும் (பெரும்பாலும்) இருக்காது. ஆனால் இந்த குறிப்பிட்ட மதத்தினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர்கள் தங்கள் மதத்தின் கோட்பாடுப்படி தான் நடக்கவேண்டும் என்று விதிமுறை விதித்திருப்பார்கள். உதாரணமாக இந்து பெண்கள் தலையில் பூ வைப்பது வழக்கம். சில மதத்தினாரல் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் தலையில் பூ வைத்துக்கொண்டு வரக்கூடாது என்று விதிமுறை விதித்திருக்கிறார்கள்.
மதம் என்பது தனி மனிதம் சம்மந்தமான விஷயம். அதை மற்றவர்கள் மீது திணிப்பது எந்த விதத்தில் நியாயம்? மனிதத்திற்கு அடுத்தது தான் மதம். சில மதங்கள் இது போன்ற ஒரு வித தீண்டாமையை பின்பற்றி வருவது மனித குலத்திற்கு ஒரு போதும் நன்மையைத்தராது. முதலில் மனிதானாய் இருப்போம். பின்பு மதத்தை பற்றி சிந்திப்போம்.