Monday, May 31, 2010

டீசல் சிக்கனம் தேவை இக்கணம்!

இன்று காலை கல்லூரி வருவதற்காக பேருந்தில் ஏறச்சென்றேன். வண்டி அணைக்கப்படாமல் இருந்தது. ஒரு வேலை உடனே வண்டியை கிளப்பப்போகிறார்கள் என்று வேகமாக ஓடி பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ஆனால் ஓட்டுனரும் நடத்துனரும் பக்கத்து டீ கடையில் தான் அமர்ந்திருந்தார்கள். இப்போது எடுப்பார்கள் இப்போது எடுப்பார்கள் என்று காத்து இருந்தது தான் மிச்சம். இருபது நிமிடம் கழித்து தான் நடத்துனரும் ஓட்டுனரும் வந்து பேருந்தை கிளப்பினார்கள். இருபது நிமிடமும் வண்டி உறுமிக்கொண்டே தான் இருந்தது. அந்த இருபது நிமிடம் வண்டி உறுமுவதற்கு எவ்வளவு எரிவாயு செலவாகி இருக்கும்? இப்படி பல இடங்களில் பல பேருந்துகளில் செய்வதால் போக்குவரத்து கழகத்துக்கு டீசலுக்கான செலவு அதிகரிக்கின்றது. இதன் விளைவு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுதல். “டீசல் சிக்கனம் தேவை இக்கணம் என்று ஓட்டுனரின் இருக்கைக்கு முன்பு கொட்டை எழுத்தில் எழுதிப்போட்டலும் இவர்களுக்கு உரைக்கதோ?