Monday, May 31, 2010

ஹரித்வார் பற்றி…

ஹரித்வார் பற்றி பெரும்பாலும் எல்லோருக்குமே தெரியும். ஹிந்துக்களின் புனித ஸ்தலம். புண்ணிய நதி என்று கூறப்படும் கங்கை நதி பாயும் இடம்.

ஹரித்வார் பற்றிய சுவையான தகவல்கள்.
ஹரிட்வரை சுற்றி ஒரு 14 கி.மீ வரை எங்கும் அசைவ உணவு கிடைபதில்லை.
முட்டை கூட கிடைபதில்லை.
அதற்கு காரணம் அங்கு கங்கை நதி ஓடுவதால் அந்த இடத்தை மக்கள் மிகவும் புனிதமாக வைத்திருக்க நினைகிறார்கள்.
ஹரித்வாரில் அசைவம் விற்க கூடாது என்றும் ஹோட்டலில் கூட அசைவ உணவு சமைத்து விற்ககூடாது என்று அங்கு உத்தரவு இருக்கின்றது.
ஹரித்வார் போன்ற புனித ஸ்தலங்களில் பைதாமா என்ற ஒன்று பிரபலம். இதில் இன்னும் ஆச்சர்ய படக்கூடிய விஷயம் என்னவென்றால் வெள்ளைபூண்டு பயன்படுத்துவது ஹிந்து சாஸ்திரத்துக்கு விரோதமானது என்று ஹரித்வார் வாசிகள் வெள்ளைபூண்டு கூட பயன்படுத்துவது கிடையாது.
ஹரித்வாருக்கு செல்லும் குடும்பத்தினர் அவர்கள் அங்கு சென்றதை பதிவு செய்யும் வழக்கம் அது. நம் ஊரில் அரசு அலுவலகங்களுக்கு முன் படிவங்களை பூர்த்தி செய்து தர ஆட்கள் இருப்பதை போல புனித ஸ்தலங்களில் பைதாமா எழுத ஆட்கள் இருக்கிறார்கள். அதை அவர்கள் பரம்பரைத தொழிலாக செய்தி வருகின்றனர். இவர்களில் பலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களுக்கு குல புரோகிதர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு முறை ஹரித்வாருக்கு செல்லும்போதும் அவரவர்களுடைய குல புரோகிதர்களிடம் சென்று தாங்கள் ஹரித்வார் வந்ததை பதிவு செய்கின்றனர். எப்போது வந்தோம், எதற்காக வந்தோம், யார் யார் வந்தோம் என்று எல்லா விவரத்தையும் எழுதிவைகின்றனர். 300 ஆண்டுகள் வரை பழமையான பைதாமாவையும் அவர்கள் பத்திரமாக வைத்திருப்பது ஆச்சர்யத்தை அளிக்கின்றது. ஓலை சுவடி காலத்தில் இருந்தே பைதாமா எழுதும் பழக்கம் இருந்திருக்கின்றது என்பதை பழைய பைதாமா விவரங்கள் அடங்கிய ஓலை சுவடிகள்தெரிவிக்கின்றது. சில குடும்பங்கள் பழமையான பைதாமாவை ஆராய்ந்து அவர்கள் முன்னோர்கள் எப்போது யார் யாருடன் எதற்காக ஹரித்வார் வந்தனர் என்பதை தெரிந்து கொள்ள முடிகின்றதாக சொல்கிறார்கள். பைதாமா வெறும் காகிதத்தில் ஒருவர் எழுதும் கதை போன்றது அல்ல. பைதாமாவில் உள்ள எந்த காலத்திலும் உச்ச நீதிமன்றத்தில் கூட ஒரு ஆதாரமாக நாம் கொடுக்க முடியும்.

ஹரித்வாரில் அடுத்து பிரபலமானது ஆசிரமங்கள். அதிக பெண் சாமியார்கள் இருக்கும் இடம் அது. மோட்சத்திற்காக தவக்கோலம் பூண்டு சாமியார் ஆகி இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள் ஒரு விசித்திரமான உண்மை. அங்கு சாமியாராக இருப்பவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள், வாழ்க்கை சுமையை தாங்க பயந்து கொண்டு தப்பித்து வந்தவர்கள், உழைத்து உண்ண இயலாதவர்கள், உழைத்து உண்ண விரும்பாதவர்கள். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உணவும் கொடுத்து உதவும் இடமாக தான் அங்கு இருக்கும் சேவை ஆசிரமங்கள் இருக்கின்றது.