Monday, May 31, 2010

எது அழகு?

எது அழகு? சிறிய கதை ஒன்று சொல்கிறேன்.

காட்டில் ஒரு அழகான மான் இருந்தது. அது ஒரு நாள் தண்ணீர் குடிக்க குளத்துக்கு சென்றது. தண்ணீரில் அதன் முகம் தெரிந்தது. அதில் அதன் அழகான கொம்புகளும் தெரிந்தது. தன அழகான கொம்புகளைப்பார்தவுடன் அதன் மனத்திற்குள் தான் அழகாக இருப்பதாக எண்ணிக்கொண்டது. “என் கொம்புகள் பிரம்மாண்டமாக மிக அழகாக இருக்கிறது. என் கால்கள் தான் சூம்பிப் போய அசிங்கமாக இருகின்றது” என்று நினைத்தது. ஒரு நாள் அந்த மானை ஒரு புலி துரத்தியது. அந்த மான் தன்னால் முடிந்த அளவு வேகமாக ஓடியது. அப்போது மரத்தின் இடையில் ஓடும்போது மானின் கொம்பு மரத்தில் சிக்கிக்கொண்டது. புலியும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு வழியாக சிக்கிய கொம்பை விடுவித்து வேகமாக ஓடி தப்பித்தது. “என் கொம்புகள் அழகாக இருந்தாலும் அதால் எனக்கு ஒரு பயனும் இல்லை. என் கால்கள் அசிங்கமாக இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அது தான் என் உயிரை காப்பாற்றிக்கொள்ள உதவியது” என்று எண்ணிக்கொண்டது. உண்மை தான். பொதுவாக அழகு என்று நாம் எண்ணிக்கொள்வது பெரும்பாலும் ஆபத்து தான். இந்த கதை ஒரு விஷயத்தை நமக்கு சொல்லித்தருகிறது. நம்மில் பலரும் அழகு அழகு என்று முகத்து அழகுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறோம். ஆனால் உண்மையான அழகு எது என்றால் நமக்கு எது பயன்படுகிறதோ அதுவே அழகு.

முகத்து அழகை மேம்படுத்துவதை குறித்து சிந்திப்பதை விட்டு உண்மையான மனத்தின் அழகை மேம்படுத்த கற்றுக்கொண்டால் இந்த உலகமே நமக்கு நண்பர்கள் ஆகும்