Monday, May 31, 2010

Phising – An easy way to hack

Phishing என்பது தற்பொழுது பிரபலமாகிக்கொண்டு வரும் ஒரு hacking முறை. இதன் மூலம் நீங்கள் நம்பகத்தன்மையானது என்று நினைக்கும் இணையதளத்தை (gmail, bank இணையதளம்) போலவே ஒரு போலி இணையபக்கத்தை தயாரித்து நீங்கள் அதை பயன்படுத்தும்படி செய்து விடுவர். நீங்களும் அது நம்பகத்தன்மயானது என்று நினைத்து உங்களது பாஸ்வோர்ட், வங்கிக்கணக்கு எண், என்று ரகசிய தகவல்களை எல்லாம் பதிவு செய்வீர்கள். ஆனால் அந்த போலி இணையதள பக்கத்தை தயாரித்தவர்கள், நீங்கள் பதியும் ரகசிய தகவல்களான வங்கிக்கணக்கு எண், பாஸ்வோர்ட், மற்றும் பலவற்றை அவர்களுக்கு ஈ-மெயில் செய்யும் படி கோடிங் செய்திருப்பார்கள்.

உதாரணமாக நீங்கள் கீழே பார்க்கும் இணைய பக்கம் Phishing முறையில் தயாரிக்கப்பட்டது.

போலியானது என்று நீங்கள் பார்த்த உடனே தெரிந்து கொள்வதற்காக சாதாரணமாக செய்திருக்கிறேன். உண்மையான இணைய பக்கம் எப்படி இருக்கும் என்று அறிய www.mail.in.comஐ பாருங்கள்.

ஆனால் அச்சு அசல் உண்மையான பக்கத்தை போலவே போலியை தயாரிக்க முடியும். அதில் நீங்கள் உங்கள் தகவல்களை பதிந்த உடனே அந்த Hacker க்கு அந்த தகவல்கள் சென்று விடும். அதை அவர் எப்படி வேண்டுமானாலும்உபயோகித்துக்கொள்வார்.

(PLEASE NOTE THAT HACKING WITHOUT ANY PERMISSION IS ILLEGAL AND IF CAUGHT MAY BE FILED UNDER CYBER CRIME. THIS ARTICLE TELLS HOW TO HACK BUT NOT TO DO IT. TRYING THE ABOVE HACKING TECHNIQUES ARE AT YOUR OWN RISK)